உயர்வோ தாழ்வோ
உயர்வோ தாழ்வோ lyrics in Tamil
உயர்வோ தாழ்வோ, மரணமோ ஜீவனோ உம் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார்?
உம் அன்பே தூய அன்பு -இயேசுவின்
அன்பே தூய அன்பு;
உம் அன்பினிலே நான் மூழ்கணுமே,
உம் அன்பே ஆனந்தமே;
உம் அன்பினிலே நான் வாழணுமே,
உம் அன்பே பேரின்பமே;
1) தனிமையின் பாதையில் தாயான தூய
அன்பு
தவித்த வேளைகளில் தந்தையின் பாச அன்பு
தோழனாக, தோளோடு என்னை சுமந்த நேசன் அன்பு (2)
2) நெரிந்த நாணல் என்னை முறியாமல் காத்த அன்பு
மங்கிய திரி என்னை அணையாமல் பார்த்த அன்பு
மறந்து போன மனிதன் என்னை மறவாத தேவ அன்பு (2)
.jpg)
Comments